உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் துப்பாக்கிச் சூடு; பிரதான சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
70 பார்வைகள்

கடந்த வருடம் மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (2) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சந்தேக நபரை சி.ஐ.டியினர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரிய நிலையில் மன்னார் நீதவான் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டினேசன் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேகநபர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு B-9125 என்ற வழக்கில் முற்படுத்தப்பட்டு, குறித்த சந்தேக நபர் மன்னார் பொலிஸாரினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குறித்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த வழக்கினை குற்ற விசாரணைப் பிரிவினர் கையாண்டு வந்தனர்.

அதனடிப்படையில் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த சந்தேக நபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற்படுத்தப்பட்டு, ஏற்கனவே 72 மணித்தியாலங்கள் கொழும்பில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தி, குறித்த 72 மணித்தியாலங்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) மதியம் 1 மணியுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில், இன்றைய தினம் சி.ஐ.டி யினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முன்னிலைப்படுத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதால் மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றில் அனுமதி கோரி இருந்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு 9 இன் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் சி.ஐ.டி யினருக்கு மதியம் 1 மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில், குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சி.ஐ.டி யினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சி.ஐ.டி யினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

59 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

68 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

75 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

57 0 0