உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
42 பார்வைகள்

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின் குடும்பத்தவர்கள் கோண்டாவில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் அவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது மதுபோதையில் வந்த உயிரிழந்து நபரின் அக்காவின் மகன் (மருமகன்) கொட்டனால் அவரை தாக்கியுள்ளார்.

இந்த விடயம் அறிந்த அயலவர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலதிக சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்றைய தினமே மாற்றப்பட்டார்.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மந்திகை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

யாழ் செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

75 0 0
யாழ் செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

215 0 0
யாழ் செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரம்; கஜேந்திரன் உட்பட நால்வருக்கு பொலிஸ் அழைப்பாணை.!

தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.…

92 0 0
யாழ் செய்திகள்

யாழில் ஹெட்போன் அணிந்தவாறு படுத்திருந்த நபர் ரயிலுக்கு இரை! : ஒரு கையும், இரண்டு கால்களும் துண்டிப்பு!!

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு கால்களையும், ஒரு கையையும் இழந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இணுவில்…

591 0 0