உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பதவி உயர்வு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரை பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன் மற்றும் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன் இரசாயனவியலில் சிரேஷ்ட பேராசிரியராகவும், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் மனிதவள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பு*லிகளின் காவல்துறைக் கட்டமைப்பு சிறப்பாக செயற்பட்டதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு.!

பொலிஸார் மதுபோதையிலும், வெற்றிலை, பாக்கு மென்றவாறும் கடமையாற்றுவது தொடர்பிலும், பொலிஸாரின் தவறான அணுகுமுறைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்ட வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2009ஆம்…

35 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையின் கடன் தரப்படுத்தல் ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ மட்டத்துக்கு உயர்வு.!

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான எஸ் அன்ட் பி, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ (நிலையானது) மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல்…

30 0 0
இலங்கை செய்திகள்

பேருந்தின் மீது உருண்டு விழுந்த கற்பாறை; ஒருவர் உ**யிரிழப்பு.!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, மலை உச்சியிலிருந்து கற்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் அப்பேருந்தில் பயணித்த…

29 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் ஒழிப்பைத் தவிர வேறு கொள்கை இல்லை.!

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்தத் திட்டத்தைத் தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை…

32 0 0