பேருந்தின் மீது உருண்டு விழுந்த கற்பாறை; ஒருவர் உ**யிரிழப்பு.!
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, மலை உச்சியிலிருந்து கற்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் அப்பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை (28) பிற்பகல் 2.30 மணியளவில் கினிகத்தேனை, கலுகல பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த பாறை பேருந்தின் மீது மோதியதோடு, பேருந்து இருக்கையில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த பயணி மீது விழுந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த குறித்த பயணி உடனடியாகக் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பாறை உருண்டு விழுந்ததில் பேருந்து பலத்த சேதமடை ந்துள்ளது.
அப்பகுதியில் பெய்த மழை காரணமாகவே மலை உச்சியிலிருந்து பாறை உருண்டு விழுந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


