உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையின் கடன் தரப்படுத்தல் ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ மட்டத்துக்கு உயர்வு.!

இலங்கை செய்திகள் 35 நிமிடங்கள் முன்
29 பார்வைகள்

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான எஸ் அன்ட் பி, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ (நிலையானது) மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசு பின்பற்றி வரும் முறையான நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே இந்தச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,
“இலங்கையின் கடன் தரப்படுத்தல் தொடர்பாக மதிப்பீடுகளை வழங்கும் மூடிஸ், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மற்றும் எஸ் அன்ட் பி ஆகிய மூன்று பிரதான சர்வதேச நிறுவனங்களில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் ஏற்கனவே இலங்கையின் கடன் தரப்படுத்தலை ‘சி’ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்கு உயர்த்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று வெள்ளிக்கிழமை எஸ் அன்ட் பி நிறுவனமும் இலங்கையின் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து மூன்று பிரதான துறைகளின் கீழ் தமது புதிய தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, நீண்டகால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் தரப்படுத்தல் ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் இலங்கைக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

அதேபோல், குறுகியகாலக் கடன் செலுத்தும் திறன் மற்றும் திரவத்தன்மை ‘சி’ நிலையிலிருந்து ‘பி’ நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், முதலீட்டாளர்களின் நிதி மாற்றம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணித் திறன் ‘பி’ நிலையாகப் பேணப்படுகின்றது.

அரச வருமானத்தைச் சேகரிப்பதில் நிலவும் செயற்றிறன், வெளிநாட்டுக் கையிருப்பைக் கட்டியெழுப்புதல் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எஸ் அன்ட் பி நிறுவனம் விசேடமாகப் பாராட்டியுள்ளது. முதல் காலாண்டில் 5.2 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 4.2 சதவீதமும் என முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 4.7 சதவீதப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பும் பணம் ஒக்டோபர் மாத நிலவரப்படி 7.6 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதுடன், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இது 9 பில்லியன் டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலதன முதலீடுகளுக்காகச் சுமார் 2 ஆயிரம் பில்லியன் ரூபாவும், டித்வா போன்ற சூழல்கள் மற்றும் பாதிப்புகளுக்கான நிவாரணங்களுக்காகவும் அரசு செலவிட்டு இந்தச் சாதனையைப் பெற்றுள்ளது.

2027 ஜனவரி முதலாம் திகதி முதல் 30 சதவீத அளவுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ள நிலையில், சில துறைகளில் உள்ள தொழிற்சங்கப் பிரிவினர் கொடுப்பனவுப் பிரச்சினைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு குறித்துப் பேசுவது நியாயமானதல்ல. அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

பொருளாதார வளர்ச்சியும் ஸ்திரத்தன்மையும் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே மேலதிக நன்மைகளைப் பெற முடியும். அறியாமையால் ஈடுபடுபவர்களைத் தவிர, யாரேனும் அரசியல் சதித்திட்டத்தின் கீழ் இந்தப் பயணத்துக்கு இடையூறு விளைவிக்க முற்பட்டால் அதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிதி ஒழுக்கத்தைப் பேணி நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பு*லிகளின் காவல்துறைக் கட்டமைப்பு சிறப்பாக செயற்பட்டதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு.!

பொலிஸார் மதுபோதையிலும், வெற்றிலை, பாக்கு மென்றவாறும் கடமையாற்றுவது தொடர்பிலும், பொலிஸாரின் தவறான அணுகுமுறைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்ட வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2009ஆம்…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பதவி உயர்வு.!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச்…

34 0 0
இலங்கை செய்திகள்

பேருந்தின் மீது உருண்டு விழுந்த கற்பாறை; ஒருவர் உ**யிரிழப்பு.!

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, மலை உச்சியிலிருந்து கற்பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் அப்பேருந்தில் பயணித்த…

29 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் ஒழிப்பைத் தவிர வேறு கொள்கை இல்லை.!

தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அந்தத் திட்டத்தைத் தவிர அரசிடம் வேறு கொள்கைகள் இல்லை…

32 0 0