உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 180 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கீடு

உலக செய்திகள் 19 நிமிடங்கள் முன்
26 பார்வைகள்

செயற்கைக்கோள் வழிகாட்டல் மற்றும் நேரக் கணிப்பு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய, தேசிய நேரக் கணிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக மேலும் 180 மில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் இதன் ஆரம்பச் செயற்பாட்டுத் திறனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செயற்கைக்கோள் சமிக்ஞைகள் முடக்கப்படுதல் மற்றும் போலியான சமிக்ஞைகள் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குவாண்டம் உணர்திறன் மற்றும் வழிகாட்டல் தொழில்நுட்பக் கொள்வனவுக்காக 138 மில்லியன் பவுண்ஸ் நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரித்தானியாவின் முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

7,000 தொன் டீசலுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பல்!

ஸ்பெயினின் இபிசா தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 7,000 தொன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.…

32 0 0
உலக செய்திகள்

“ஹசீனாவின் தலைமுடிக்கு சேதம் ஏற்பட்டால் கூட பங்களாதேஷ் அரசாங்கமே பொறுப்பு” : அமெரிக்கா எச்சரிக்கை!

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாய்நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு தொடர்பாகப் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு முன்னாள் பென்டகன் அதிகாரி…

36 0 0
உலக செய்திகள்

புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீதான முதல் வாக்கெடுப்பு அடுத்த மாதம்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் தொடர்பில் , அடுத்த மாதம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. வர்த்தகத் தடைகளை நீக்குவதையும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய…

34 0 0
உலக செய்திகள்

‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல்…

33 0 0