உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்கள் ஆணை வழங்கியது அபிவிருத்திக்கே தவிர அடக்குமுறைக்கு அல்ல! : நாடாளுமன்றத்தில் சஜித் ஆவேசம்

இலங்கை செய்திகள் 18 நிமிடங்கள் முன்
78 பார்வைகள்

அரசுக்கு மக்கள் ஆணை வழங்கியது நாட்டின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அல்ல என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும், அரசு மக்கள் வழங்கிய ஆணையை மீறி ஜனநாயக உரிமையைச் சீர்குலைக்கும் வகையில் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

“அரசு இன்னமும் பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி மாதாந்த வறுமைக் கோடு 17 ஆயிரத்து 702 ரூபாயாக வரையறுக்கப்பட்ட போதிலும், இந்தத் தரவுகள் முற்றிலும் தவறானவையாகும்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ஆணுக்கு 3 ஆயிரத்து 340 கிலோ கலோரிகளும், சுறுசுறுப்பான பெண்ணுக்கு 2 ஆயிரத்து 680 கிலோ கலோரிகளும் தேவைப்படுகின்றன. இவ்வாறான தவறான தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு தயாரிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இந்த அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்பது புலப்படுகின்றது.

நாட்டில் 30% முதல் 40% வரையான மக்கள் கடுமையான வறுமையில் வாடுகின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்குப் பதிலாக வேலையின்மையே அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறைக் கொள்கைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைக் கூட இலங்கை இழக்க நேரிடலாம் என எச்சரிக்கின்றேன்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லும் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலாக இந்த அரசே திகழ்ந்து வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது அரசை விமர்சிப்பவர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், இன்று அவர் அங்கம் வகிக்கும் அதே அரசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் தாண்டிய கொடூரமான அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அன்று ‘இருள் அரசுகள்’ குறித்துப் பேசியவர்கள், இன்று தாங்களே ஒரு இருள் அரசை  நடத்தி வருகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணிக்கிறது.!

அரசாங்கமானது நாட்டின் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இரு புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…

69 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் நாள், திலீபன் சிலை விவகாரம் : யாழ். மாநகர சபையில் இன்று பெரும் அமளி!

மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள், யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் அமளிதுமளியையும்…

60 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களைக் கற்பனை உலகில் வாழ வைக்கின்றனர்.!

அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அவர்களைத் தொடர்ந்தும் கற்பனை உலகில் வாழ வைப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சாடியுள்ளார். அவர் மேலும்…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் விஷவாயுனால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

நோட்டன் காபேக்ஸ் பாடசாலை மாணவர்கள் விஷ வாயுனால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் இன்று 05…

74 0 0