உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய்ந்தமருதில் ஒலிபெருக்கிகளால் தொல்லை; கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
92 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சந்தையை அண்மித்த பகுதியில் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதுடன், மையவாடியும் காணப்படுகின்றது.

இந்நிலையில், சந்தைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் மரணித்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்கும், அங்கு வருகை தரும் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் குறித்த ஒலிபெருக்கிகளின் அதிக சத்தம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேரம், ஒலி அளவு உள்ளிட்ட விடயங்களில் உரிய கட்டுப்பாடுகளை விதித்து, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இவ்வாறான இடையூறுகளைத் தவிர்க்க முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஒலிபெருக்கிப் பயன்பாடு மற்றும் ஒலி மாசுபாடு தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, பொதுமக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அமைதியான வாழ்வுச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதுடன், சட்ட வரம்புகளை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய செயற்பாடுகளால் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதி.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்…

81 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரை உந்துருளியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு இளைஞர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம்…

86 0 0
அம்பாறை செய்திகள்

ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ கவிதை நாடகம் அரங்கேற்றம்.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் TK/THIRUKKOVIL MMTMV பாடசாலையின் ஆங்கிலப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில இலக்கியப் படைப்பான வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ (OTHELLO) கவிதை…

124 0 0
அம்பாறை செய்திகள்

கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்; பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் அவதி.!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரின் பிரதான வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும்…

121 0 0