உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி; மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
73 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“அரசு நாட்டின் முக்கிய விசாரணை மற்றும் புலனாய்வு நிறுவனங்களில் தமக்கு வேண்டிய அரசியல் ஆதரவாளர்களை நியமித்துள்ளது. ரவி செனவிரத்ன போன்றோரின் நியமனங்கள் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கையாண்டு வருகின்றனர்.

சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர்கள் கௌரவிக்கப்படும் நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசு காட்டும் அணுகுமுறை மிகவும் தவறானது.

பௌத்த பிக்குமார்கள் நீண்ட தூரம் நடைபயணமாக வந்து ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அங்கேயே அவர்களுக்குப் பதிலளிக்காது பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களின் முன்னிலையில் ஜனாதிபதி பதிலளித்த விதம் ஒரு பொறுப்பான தலைவருக்குரிய பண்பல்ல. இது மதகுருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.

தற்போதைய அரசு ஈழக் கோரிக்கையை ஆதரித்த தரப்பினரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததால், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது. இது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாரிய ஆபத்தானது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

64 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

76 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0