செஞ்சியில் காணாமல்போன சிறுமி : பொலிஸார் தீவிர விசாரணை
செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமாவதி (7) என்பவர்இ அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 11ம் திகதி இரவு சிறுமியின் பிறந்தநாள் வீட்டில் கொண்டாடப்பட்டது.
அன்றிரவு தாயின் அருகில் படுத்து உறங்கிய சிறுமியை மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர்.
ஆனால்இ சிறுமி கிடைக்காததால் சத்தியமங்கலம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.
11 நாட்கள் ஆகியும் மாயமான சிறுமியை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். 3 டிஎஸ்பிக்கள்இ 5 ஆய்வாளர்கள்இ 5 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட துறையினர் அடங்கிய 10 தனிப்படைகள் தேடுதல் வேட்டை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
600 பேரின் செல்போன் எண்களை பெற்றும்இ சந்தேகத்துக்கிடமான 20 பேர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில்இ சிறுமி மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர்.
காணாமல் போன சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமியின் பெற்றோர் வடிவேல்இ பவானி ஆகியோரிடம் சிறுமி காணாமல் போன தினத்தில் என்ன நடந்தது? யாரெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வந்தனர்.
குடும்பத்தினருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என பல்வேறு கேள்விகளை எழுப்பில் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி கீதாஇ இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட போலீசார் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் சிபிசிஐடி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி கீதா தலைமையிலான துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

