உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
65 பார்வைகள்

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாகச் செயற்பாடற்று இருந்த பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்துப் பழைய மாணவர்களையும் மீண்டும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சி, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வு ஆகியவற்றுக்குப் பங்களிக்கும் ஒரு பலமிக்க அமைப்பை உருவாக்குவதே இக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

எனவே, அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற அனைத்துப் பழைய மாணவர்களும், பாடசாலையின் நலன்விரும்பிகளும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, தாய் பாடசாலையின் மறுமலர்ச்சிக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சங்கம் அமைக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இச் செய்தியினைத் தங்களது சக பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்ந்து இக் கூட்டம் பெருவெற்றி பெற ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

77 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0
இலங்கை செய்திகள்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி…

76 0 0