உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 105 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன்கள்.!

இந்திய செய்திகள் 12 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மன்னார் வளைகுடா உள்ளிட்ட தெற்கு கடல் பகுதியில் கனமழை பெய்ததால் மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்ததால் மீன் பிடித்து விட்டு இன்று (21) மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 கூரல் மீனும், மற்றொறுவர் படகில் 2 கூரல் மீன்கள் என மொத்தமாக ஏழு கூரல் மீன்கள் சிக்கியது. ஏழு கூரல் மீன்களும் மொத்தமாக 105 கிலோ எடை கொண்டவை. இந்த மீன்கள் கிலோ ரூ.3500 வீதம், இந்திய மதிப்பில் 3 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை.

கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்துகின்றனர்.

கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளை கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாம்பன் விசைப்படகு மீனவர் பிடித்த ஏழு கூரல் மீன்களையும் 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டைகர் ஷெராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

77 0 0
இந்திய செய்திகள்

இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

இந்தியாவும் வொஷிங்டனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அந்த ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

81 0 0
இந்திய செய்திகள்

இந்திய ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் பதிவான வலுவான வாராந்திர முன்னேற்றமாக…

96 0 0
இந்திய செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா கைது!

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாராபுரம்…

67 0 0