உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நோபல் பரிசு தான் வழங்கவில்லை புலிட்சர் பரிசாவது வழங்கி இருக்கலாம்!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
86 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புலிட்சர் பரிசும் தனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய போர் பதற்றங்களைத் தணித்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறும் ட்ரம்ப், இதன் மூலம் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணித்ததையும் தனது சாதனைகளில் ஒன்றாக அவர் குறிப்பிட்டு வருகிறார்.

எனினும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து ட்ரம்ப் ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் நோர்வே மீதும் விமர்சனங்களை முன்வைத்த அவர், பரிசு வழங்கப்படாதது அந்த நாட்டுக்கு நீங்காத களங்கமாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தெற்கு கரோலினாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ட்ரம்ப், தனக்கு நோபல் பரிசு மட்டுமன்றி, பத்திரிகைத் துறை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, எழுத்துப் பணிக்காகத் தனக்குப் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா தொடர்பான விசாரணைகள் குறித்து செய்தி வெளியிட்டு புலிட்சர் பரிசுகளைப் பெற்ற பத்திரிகையாளர்களின் அறிக்கைகள் துல்லியமற்றவை எனக் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், அந்த விருதுகளைப் பெற்றவர்கள் அவற்றுக்குத் தகுதியானவர்கள் அல்லர் என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அமைதிக்கான நோபல் பரிசு மீதான தனது விருப்பத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ட்ரம்ப், தற்போது புலிட்சர் பரிசு குறித்தும் கருத்துத் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

தாய்வானில் சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து!

தாய்வானை நோக்கி சக்திவாய்ந்த புயல் நகர்ந்து வருவதையடுத்து, அங்கு சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இன்று…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் போர்க்களத்தில் முக்கிய திருப்பம்!

யுக்ரைனின் போர்க்களத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு அமைப்பாக விளங்கும் ‘ஸ்டார்ஷீல்ட்’ இராணுவ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

81 0 0
உலக செய்திகள்

சவூதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

103 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : புரட்சிகரக் காவல்படை எச்சரிக்கை!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் அல்லது படையெடுப்பு நடத்த முயலும் எந்தவொரு நாடும் போரின் நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் அளவிலான மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என…

88 0 0