உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச விசாரணை கோரி நவம்பர் மாதம் செம்மணியில் மாபெரும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
78 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சங்கத்தின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 583 மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்தவித முறையான மரபணுப் பரிசோதனைகளோ அல்லது தடயவியல் ஆய்வுகளோ இன்றியும், அதனை ஒரு மனிதப் புதைகுழி எனக் குறிப்பிடாமலும் நீதிமன்றத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கொக்குத்தொடுவாய் மற்றும் சதொச மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடப்பட்டது போன்று செம்மணியும் மூடப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இதில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்களின் நேரடிப் பங்களிப்புடன் மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இனப்படுகொலையின் மிகப்பெரிய சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிக்கு உரிய சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குச் செம்மணிப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச நீதி கோரும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

72 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

77 0 0
இலங்கை செய்திகள்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி…

72 0 0
இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு வனவிலங்கு வைத்தியக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனளிக்கவில்லை. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை…

72 0 0