உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
77 பார்வைகள்

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சில உணவு கையாளும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உணவு தயாரிக்கப்படும் இடங்களில் ஈக்களின் நடமாட்டம், எலிகளால் உணவு மாசுபடக்கூடிய அபாயம், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இடங்களில் சுகாதாரக் குறைபாடுகள், உரிய அனுமதிகள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ அறிக்கைகள் இல்லாமை போன்ற விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமை, அசுத்தமான பாத்திரங்களில் உணவைச் சேமித்தல், உணவுப் பொதியிடுவதற்குப் பொருத்தமற்ற பொருட்களைப் பயன்படுத்துதல், சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான குறைபாடுகள் உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் பாதிப்பதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனையடுத்து, சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

64 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0
இலங்கை செய்திகள்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி…

76 0 0