உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எமது மக்கள் படும் அவலத்தின் பாவங்களை அநுர அரசு சுமக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
68 பார்வைகள்

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.

தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, தமது உரிமைக்காக மயிலிட்டி மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து வரும் மக்கள், இன்று பெய்துவரும் கன மழைக்கு மத்தியிலும் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக வாரங்கள் கடந்து மாதங்கள், வருடங்கள் என உருண்டோடும் நிலையிலும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நாம் ஏன் எமது நிலங்களை இழந்து இந்த அவலத்தைச் சுமக்க வேண்டும்?” என தமது மனக்குமுறலை வெளிப்படுத்திய மக்கள், எமது சொந்த நிலங்களை இழந்து, எமது வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் இந்த அவலத்தை நாம் ஏன் தொடர்ந்து சுமக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

அத்துடன், எமது மண்ணில் வாழ்வதற்கும், எமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கும் நாம் ஏன் இவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கின்றது? எனவும் கேள்வி எழுப்பிய மக்கள், தாம் தமது பூர்வீக நிலங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், தமக்குச் சொந்தமான இடங்களில் வாழும் உரிமை மறுக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக தமது பூர்வீக மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வரும் நிலையில், கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருப்பது தங்களது துயரத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிய வாக்குறுதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இப்போது மீண்டும் மீண்டும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் இந்தத் தொடர்கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்க நாம் தயாராக இல்லை. எமக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல; எமது காணிகள் விடுவிக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளும் தீர்வுமே எனவும் மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன், அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும், காணி விடுவிப்பு தொடர்பான அறிவிப்புகளும் வாக்குறுதிகளும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதே நேரம் 27 ஆவது வாரமாகத் தொடரும் இந்தப் போராட்டம், காணி விடுவிப்பு என்பது வெறுமனே நிர்வாக ரீதியான ஒரு கோரிக்கை மட்டுமல்ல; அது மக்களின் வாழ்வுரிமை, பூர்வீகத்துடன் கொண்டுள்ள பிணைப்பு மற்றும் தமது சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற அடிப்படை விருப்பம் என்பதையும் “கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெரும் துன்பங்களைச் சுமந்து போராடிய மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பழமையான பனை ஓலைச்சுவடிகளை பாதுகாக்க கங்காராம விகாரையுடன் கைகோர்த்தது இந்தியா.!

கொழும்பு கங்காராம விகாரையானது, புது டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் மையம் (IIC) மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ‘SAMHITA’ திட்டத்தின் கீழ்…

69 0 0
இலங்கை செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்க உட்பட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும்…

82 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது.!

தணமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் தணமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்…

90 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு.!

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய…

97 0 0