உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

இலங்கை செய்திகள் 53 நிமிடங்கள் முன்
84 பார்வைகள்

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற சோகமான தகவல் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண் தனது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளை அத்துமீறி வந்த இனந்தெரியாத நபர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளி யார் மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாரம்பரியக் கலைகளின் சங்கமம் – முல்லைமோடி நிகழ்வு.!

முல்லை மண் வீரம் செறிந்த மண். தனது மண்ணுக்கே உரித்தான தனித்துவமான கலைகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றது. அவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு இவ்வாறான…

1 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

69 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

79 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

86 0 0