உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
21 பார்வைகள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.

முன்னதாக போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.

எனினும், தொடர்ச்சியான மழையால் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் அப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் இந்த வீதி மற்றும் பால பிரச்சினைக்கு தற்காலிக சீரமைப்புகள் மட்டுமன்றி, நிரந்தரமான பாலம் அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, குறித்த பாலத்திற்கான நிரந்தர தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் ஜீவன் தொண்டமான் உடன் கவணம் செலுத்த வேண்டும் எனவும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல அம்பகமு பிரதேச செயலாளர் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் திருமதி துஷாரி தென்னகோன் மத்திய மாகாண ஆளுநர் இது குறித்து கவனம் செலுத்தி அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்ப ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

21 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

21 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

23 0 0
இலங்கை செய்திகள்

பதவியில் இருப்பவர்கள் நேர்மையுடன் சேவையாற்ற வேண்டும்! : வடக்கு ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டல்

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை…

22 0 0