உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
20 பார்வைகள்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்று (19.09.2026) சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக் கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும்.

இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக் கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன், கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

18 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

18 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

18 0 0
இலங்கை செய்திகள்

பதவியில் இருப்பவர்கள் நேர்மையுடன் சேவையாற்ற வேண்டும்! : வடக்கு ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டல்

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை…

20 0 0