உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
19 பார்வைகள்

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும் துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

முகநூல் பதிவொன்றுக்கு கருத்தினை வெளிப்படுத்தியபோது, இஸ்லாமிய மதத்திற்கும், நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவமதிப்பினை ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டு, 5 வருடகால சிறைத் தண்டனைக்கும், 03 மில்லியன் ரியால் தண்டத்துக்கும் உள்வாங்கப்பட்டார் என்றும் தெரிய வந்துள்ள நிலையில், இப்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு நபர் தான் சாராத மதமாக இருப்பினும், அந்த மதத்தை அவமதிப்பு செய்யக்கூடாது. அந்த மதத்தையும் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமான விடயமாகும். எனவே, ஒரு மதத்தை – அதனது தூதரை – அவமதிப்பு செய்தார் என்பது தவறானதொரு செயலாகும்,

இருந்தாலும், அவர் செய்த குற்றத்திற்கு பொது மன்னிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுவதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பின், அதனை அவரது பெற்றோர்களது மனிதாபிமான கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் அதனை இரத்துச் செய்து, பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பது உகந்தது என எண்ணுகிறேன்.

இது தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றென்றும் எனது நன்றி உரித்துடையது என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழையால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.…

18 0 0
இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

19 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

20 0 0
இலங்கை செய்திகள்

பதவியில் இருப்பவர்கள் நேர்மையுடன் சேவையாற்ற வேண்டும்! : வடக்கு ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டல்

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை…

20 0 0