உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
9 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை இழந்த மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் ஒன்றுகூடி இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாம் வீடுகள் மற்றும் நிலங்கள் அற்று நீண்ட காலமாக இடம்பெயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவம் தற்போதும் தங்கியிருப்பதுடன், அங்கு விவசாயக் செயற்பாடுகளிலும் வர்த்தக நிலையங்களை அமைத்தும் தமது சொந்தத் தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இராணுவத்தின் பிடியில் உள்ள தமது காணிகளை மீளப்பெற்று, சொந்த நிலங்களில் மீள்குடியேறும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!

ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான…

16 0 0
இலங்கை செய்திகள்

மனிதாபிமான முறையில் அணுகி, அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ் கோரிக்கை!

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்துள்ள, கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற மரண தண்டனை காரணமாக அவரது குடும்பத்தாரும், அநேகமான இலங்கையர்களும் பெரும்…

17 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,…

18 0 0
இலங்கை செய்திகள்

பதவியில் இருப்பவர்கள் நேர்மையுடன் சேவையாற்ற வேண்டும்! : வடக்கு ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டல்

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை…

18 0 0