உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
34 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களுக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் முடக்கியுள்ளது.

பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது கைமாற்றுவதோ தடுத்து நிறுத்தப்பட்டு முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் வாங்கப்பட்ட வத்தளை மற்றும் ஹுணுபிட்டி பகுதிகளைச் சேர்ந்த 4 காணிகள், இருமாடி வீடு உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் கார் ஒன்று என 900 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இராணுவம் ஆக்கிரமித்துள்ள முள்ளியவளை தபாலக காணியை விடுவித்து நிரந்த கட்டடத்தை அமையுங்கள்.!

முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள காணியை 2026ஆம் ஆண்டுக்குள் விடுவித்து அஞ்சல் திணைக்களத்திடம் முறையாகக் கையளிக்க நடவடிக்கை…

25 0 0
இலங்கை செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

20 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இளைஞனை உயிருடன் மீட்டுத் தருமாறு தாயார் கண்ணீர் கோரிக்கை.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது…

19 0 0
இலங்கை செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது.!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர்…

22 0 0