உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

கெசல்கமு ஓயாவை இடைமறித்து சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழப்பட்ட பகுதி முற்றுகை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
52 பார்வைகள்

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் கெசல்கமு ஓயா நோர்வூட், ஒர்ட்ரி தோட்டத்தில் உள்ள ஓயாவை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடமொன்றை, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

முற்றுகை நடவடிக்கையின் போது அங்கு இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 நீர் பம்பிகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஹட்டன் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடி முடக்கப்பட்ட இந்த நிலத்தில், மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த சுமார் 100 பேரை ஈடுபடுத்தி மீண்டும் இரவும் பகலும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

கெசல்கமு ஓயாவை மறித்து பெரிய குழிகளைத் தோண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த மாணிக்க கற்கள் அகழ்வு காரணமாக அப்பகுதியின் சூழல் அமைப்பிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், கெசல்கமு ஓயாவை மறித்து அமைக்கப்பட்டிருந்த குழிகளை உடைத்தெறிவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நான் புலிதான் ஆனால் விடு@த@லைப் புலி அல்ல: அர்ச்சுனா விளக்கம்!!

மேடையில்  தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி  தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.…

43 0 0
இலங்கை செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேராவுக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவை, 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

45 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கு நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கான நான்கு மாடிக் குடியிருப்புக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. டமாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு…

47 0 0