உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
44 பார்வைகள்

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபரால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.

பின்னர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நான் புலிதான் ஆனால் விடு@த@லைப் புலி அல்ல: அர்ச்சுனா விளக்கம்!!

மேடையில்  தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி  தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.…

45 0 0
இலங்கை செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேராவுக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவை, 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

47 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கு நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கான நான்கு மாடிக் குடியிருப்புக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. டமாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு…

50 0 0
இலங்கை செய்திகள்

கெசல்கமு ஓயாவை இடைமறித்து சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழப்பட்ட பகுதி முற்றுகை!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் கெசல்கமு ஓயா நோர்வூட், ஒர்ட்ரி தோட்டத்தில் உள்ள ஓயாவை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு…

53 0 0