கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கு நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கான நான்கு மாடிக் குடியிருப்புக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
டமாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 184,730,000.00ரூபா செலவில் குறித்த கட்டிடம் அமையவுள்ளது.
குறித்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொண்டு அடிகக்கல் நாட்டி வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் திலக் நாதன் நிஹால் அபேசிங்க,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்



