உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
34 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்து ஆலயமாக விளங்குகின்ற நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் (17) சிறப்பாக இடம்பெற்றது.

2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ் ஆலயத்திற்கு ராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நட்டப்பட்டது.

இயற்கையின் அருள் அம்பிகையின் ஆசி பிரதேச மக்களின் பெரும் முயற்சியால் பஞ்சதள ராஜகோபுரம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திங்கட்கிழமை (14) அதிகாலை 5.30 மணி முதல் கர்மா ரம்பம், செவ்வாய்க்கிழமை(15) காலை 6.30மணி முதல் புண்ணியாவாசனம், விசேட சந்தி, யாக பூஜை,புதன்கிழமை(16) காலை 8.00 மணி முதல் அடியார்களின் எண்ணைக் காப்பு நடைபெற்று இன்று வியாழக்கிழமை (17) ஆம் திகதி காலை 7.30 மணி முதல் புண்ணியாவாசனம் யாகபூஜை, குண்ட பூஜை, குறித்த சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுர, ஸ்தூப லின்க, ஸ்தூபி அபிஷேகங்கள் புனித நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

38 0 0