உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் புதிய மருத்துவ விடுதிக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
49 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி மருத்துவ விடுதித் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

மின் தூக்கிகள், குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோகக் கட்டமைப்பு போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பகுதி அமைக்கப்படவுள்ளது.

தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்டோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,

“முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையானது குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாகக் காணப்படுவதால், படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டடம் அமைக்கப்படுகின்றது.

வெளிநாட்டுப் பயிற்சி முடித்துத் திரும்பும் விசேட வைத்தியர்களை நியமிப்பதில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக நிதியுதவி வழங்கிய இந்திய அரசுக்கும் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் நன்றிகள்.” – என்றார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்,

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் சான்றாக இந்தத் திட்டம் விளங்குகின்றது. ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தியா தொடர்ந்து நம்பகமான பங்காளியாகத் திகழும்.

‘அயல் நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவு வெறும் அயல்நாடு என்ற நிலையைத் தாண்டிய வரலாற்றுப் பிணைப்புமிக்கது.” – என்றார்.

நினைவுப் பலகையைத் திறந்து வைத்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்

பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது.!

எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள்…

39 0 0
இலங்கை செய்திகள்

பொலன்னறுவையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் உயி@ரிழப்பு!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே…

38 0 0