உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

இந்தியா – இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
110 பார்வைகள்

இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான L-70 துப்பாக்கி கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இதில் ஒன்றாகும்.

இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கான மற்றொரு ஒப்பந்தமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அத்துடன், இலங்கை தேசிய மாணவர் படையணி மற்றும் இந்திய தேசிய மாணவர் படையணிக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தமும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சத்துருகொண்டான் படுகொ@லையின் 36 ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம்இன்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு…

101 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri),…

53 0 0
இலங்கை செய்திகள்

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொ@லைச் சதி!

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொ@லை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை…

151 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல்…

122 0 0