உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி!

உலக செய்திகள் 7 மணி நேரம் முன்
107 பார்வைகள்

தூதரக நிலைமைக்கு முரணான “ஏற்றுக்கொள்ள முடியாத” நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது.

ஹங்கேரியின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இந்த முடிவு, ரஷ்யாவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அர்த்தப்படாது என்று ஹங்கேரியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அனிதா ஓர்பன் தெரிவித்துள்ளார்.

எனினும், ஹங்கேரியின் இந்த நடவடிக்கைக்கு “கடுமையான மற்றும் வேதனையான” பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திப்பலகை மரியா சகாரோவா தெரிவித்தார்.

2022 இல் யுக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாக இருந்தது.

இது ஒரு “சட்டபூர்வமான முடிவு” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் விகாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் “தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைக்கும்” என்றும் கூறினார்.

யுக்ரைன் மீதான முழு அளவிலான போரைத் தொடர்ந்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றியிருந்தன.

எனினும் இதுவரை ஹங்கேரி மாத்திரம் அந்த நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்து வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சமூக வலைத்தளங்களை உலுக்கும் புதிய சட்டம்!

சமூக வலைத்தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களைப் பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலான புதிய சட்ட வரைவை அவுஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள்…

111 0 0
உலக செய்திகள்

Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிரடித் தடை!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

107 0 0
உலக செய்திகள்

சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு!

உலகின் மிக அதிக வேதனம் பெறும் அரசியல் தலைவரான சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கான ஆண்டுச் வேதனத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு…

116 0 0
உலக செய்திகள்

பிரித்தானிய மன்னர் தொடர்பில் புனையப்பட்ட காணொளியை வெளியிட்ட ட்ரம்ப்!

பிரித்தானிய மன்னர் சார்லஸ், அமெரிக்காவுக்கான அரசுப் பயணத்தின்போது மயங்கி வீழ்ந்த ஒருவரைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போன்ற தவறான மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

96 0 0