உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

அந்தணர்களின் தலைமைத்துவமே இந்து மத பீடத்திற்கு சிறப்பானது – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
110 பார்வைகள்

அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது.

அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற என்னப்பாட்டுடன் ஊடகங்கள் ரீதியாக அவதானிக்க கூடியதாக இருந்தது இதனையிட்டு கலாநிதி பாபு சர்மா தெரிவிக்கையில் யார் யார் அமைப்புகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தங்களுக்குரிய அதிகாரத்திற்க்குரிய தலைமைத்துவத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் தங்கள் சேவைகளை சிறப்பாக செய்து வருவதை இலங்கையில் இந்து மத ரீதியாக அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

தற்போது இந்து மத பீடம் அமைப்பதற்கு சில அமைப்புகள் முன் வந்திருக்கின்றன. ஆனால் அது குறித்த பகுதிகளை மட்டும் சாராது இலங்கை முழுவதும் இருக்கின்ற இந்துக்கள் அடங்கலாக உறுப்பினர்கள் தெரிவு செய்து அந்த உறுப்பினர்கள் ஊடாக ஒரு தலைமைத்துவத்தை தேர்வு செய்வது சிறப்பானது

ஒரு குறித்த அமைப்பு தேர்வு செய்யப்படுமாக இருந்தால் ஏனைய அமைப்புகள் அதற்கு உடன்பாடு காட்டாவிடில் அவர்களால் இயங்க முடியாது இன்று நல்லை ஆதீனம் சுவாமி மறைந்ததன் பின்னர் அது வறுமையாகவே இருக்கிறது அங்கு சுவாமிகள் இல்லை இப்படியான நிலவரம் தான் இலங்கையில் இருக்கிறது இந்தியாவிலிருந்து சுவாமிகளை அழைத்து செயற்படக்கூடிய தன்மை இருந்தும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை அதேபோன்றுதான் இந்து மதத்திற்கான தலைமத்துவம் அந்தண சிவாச்சாரியர்களே பொருத்தமானவர்கள்.

அவர்கள் நாளும் முழுதும் இறைவனுடன் இருப்பவர்கள் மக்களுடன் பழகுபவர்கள் அவர்கள் அந்த உணர்வுகளை உணரகூடிய வல்லமை இருக்கிறது.

மற்றவர்களை அரவணைக்கும் குணமும் அவர்களிடம் நிரம்பி இருக்கிறது.

அந்த வகையில் அந்தண தலைமைத்துவம் கொண்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிவாச்சாரியார்களை உள்ளடக்கி ஒரு பீடத்தை உருவாக்குவதே சிறப்பானது.

பௌத்த மதத்தில் பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மதத்தில் அருட்தந்தைமார்கள் இஸ்லாமிய மதத்தில் மௌலவிமார்கள் அதேபோன்று இந்து மதத்தில் அந்தணர்கள் தான் தலைமைத்துவத்தில் இருக்க வேண்டும் என்பது எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பும் .

அந்த வகையில் குறித்த அமைப்பைச் சாராது இலங்கை முழுவதும் உள்ளடங்கிய ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கி அதனை அரச அங்கீகாரம் பெற செய்வதே சிறப்பான வழி ஆகும் என கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடியில் சிக்கிய 6 ஆசிரியர்கள் பணிநீக்கம்!

அஸ்வெசும மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் ஹட்டன் நீதி மன்றம் நீடிப்பு. நோர்வூட் பிரதேச செயலக…

123 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முனையூர் பாடசாலை அபார சாதனை!

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சிறப்பான பெறுபேற்றை…

69 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்!

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.…

120 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் வீதிகளில் அணிவகுத்த மாணவர்கள்! : விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகங்களும் அரங்கேற்றம்!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

116 0 0