உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

நான் போர்க் குற்றவாளி அல்லன்! – சர்வதேசத் தடைகள் எனக்கு எதற்கு? : சவேந்திர சில்வா ஆதங்கம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
93 பார்வைகள்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா முற்றாக நிராகரித்துள்ளார்.

இந்தியாவை மையமாகக் கொண்ட ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முப்படைகளும் தீவிரமாக முயன்றன என்றும், இலங்கைப் படைப் பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியாகவும் சட்டத்துக்குட்பட்டும் போரிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவால் தனக்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்லன், எனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே போரிட்டேன்” என்றும்  தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி வலியுறுத்தல்!

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.…

114 0 0
இலங்கை செய்திகள்

அந்தணர்களின் தலைமைத்துவமே இந்து மத பீடத்திற்கு சிறப்பானது – சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவிப்பு

அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது. அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற…

106 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் வீதிகளில் அணிவகுத்த மாணவர்கள்! : விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகங்களும் அரங்கேற்றம்!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

106 0 0
இலங்கை செய்திகள்

அரசின் விரிவான ஜனநாயக அழிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்!

அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

134 0 0