உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
91 பார்வைகள்

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு மாணவர் பேரணியும் வீதி நாடகங்களும் இன்று (08) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதான வீதியில் சிறப்பாக இடம்பெற்றன.

இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் “மக்கள், பூமி மற்றும் செழிப்புக்கான எழுத்தறிவு” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான பேரணி, திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியை சென்றடைந்தது. அங்கு மாணவர்களால் எழுத்தறிவு மற்றும் சமூக விழிப்புணர்வை மையப்படுத்திய வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேரணி திருக்கோவில் பிரதான வீதி ஊடாக திருக்கோவில் சூசையப்பர் ஆலய முன்றலை சென்றடைந்ததுடன், அங்கு ஆசிரியர்களின் பங்கேற்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகமும் இடம்பெற்றது.

பின்னர் பிரதான வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்ட பேரணி திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தை சென்றடைந்தது. அங்கிருந்து மாணவர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர்.

தொடர்ந்து திருக்கோவில் அரியநாயகம் வீதி ஊடாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தை பேரணி சென்றடைந்தது. அங்கு போதைப்பொருள் பாவனையின் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திரு. ஏ. நசீர் மற்றும் திரு. எஸ். சுஜனுதன், வணிகக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.கே. பிரபாகரன், முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். விவேகானந்தராஜா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், திருக்கோவில் கல்வி வலய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எழுத்தறிவு என்பது கல்வியைப் பெறுவதற்கான அடித்தளமாக மட்டுமன்றி, போதைப்பொருள் உள்ளிட்ட சமூகத் தீமைகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாத்து, பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய கருவியாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல கோடி ரூபாய் பெறுமதியான போ*தைப்பொருட்கள் கடத்தல்.!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச்…

77 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது. கடந்த 2008…

94 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல்.!

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2026 செப்டம்பர் 08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை, கடற்படை…

89 0 0
இலங்கை செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனம்.!

தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் கொள்கை பலவீனமாக காணப்படுகின்றன. இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற விதத்தில் அமைந்து காணப்படுகின்றன. இதற்கு முன்னரும்…

99 0 0