உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராஜபக்ஷக்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை ஐ.தே.க. விமர்சிப்பது இரட்டை வேட அரசியல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
162 பார்வைகள்

நல்லாட்சி அரச காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, அதையே ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்து அறிக்கை வெளியிடுவது அவர்களின் இரட்டை வேடத்தையும் வெட்கக்கேடான அரசியலையும் வெளிப்படுத்துவதாக ‘ஒருமித்த எதிர்க்கட்சியின்’ இணை அழைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அத்துகோரள ஆகியோர் சட்டத்தையும் பொலிஸையும் தம்வசம் வைத்திருந்த நல்லாட்சி காலத்தில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், தற்போது அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் போது, ஐக்கிய தேசியக் கட்சி அதை விமர்சித்து அறிக்கை வெளியிடுவது முற்றிலும் முரண்பாடானது.

முன்னர் நாட்டின் பிரதான சக்தியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, தற்போது தனது வாக்கு வங்கியை 2 சதவீதத்துக்கும் குறைவாக இழந்து பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான கொள்கையற்ற இரட்டை வேட அரசியலாலேயே அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதுடன், தற்போது அக்கட்சியில் இருக்கும் எஞ்சிய உறுப்பினர்கள் கூட வீதியில் இறங்கி நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேலும், ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் உயிரைப் பணயம் வைத்துப் போராடியே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தனர். அவ்வாறு போராடிய ஆதரவாளர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நாட்டைக் சூறையாடிய ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருமித்த எதிர்க்கட்சி தொடர்ந்து கண்டிக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

64 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

76 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0