உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு: இலங்கையின் முன்னுரிமை பற்றி கலந்தாய்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
157 பார்வைகள்

வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின் முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சை நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் பொதுச் சபை அமர்வு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான ஒத்துழைப்பு, ‘ஐ.நா. 80’ முன்முயற்சி, ஐ.நா. நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது தன்னார்வ தேசிய மீளாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும், பல்தரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும் உறுதியாகவுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

64 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

76 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0