உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு ட்ரம்ப் அறிவுறுத்தல்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
111 பார்வைகள்

அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த ‘போம்பார்டியர்’ (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு ‘பிக்பேங்க்’ (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்று சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.

கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் – Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.

இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்’ (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் போர் முடிந்தால் எண்ணெய் விலை பெருமளவு குறையும் – ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான மோதல் முடிவுக்கு வந்தவுடன் மசகு எண்ணெய் விலைகள் பெருமளவு குறையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு…

132 0 0
உலக செய்திகள்

இராணுவ பயன்பாட்டிற்காக மனிதவடிவ ரோபோக்களைச் சோதனை செய்யும் சீனா!

சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற உலக மனிதவடிவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர், இந்த ரோபோக்களை இராணுவப் பயிற்சி தளங்களிலும், போர்க்களங்களிலும் பயன்படுத்தும் ஆய்வுகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது.…

147 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட முன்வருமாறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!

அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை…

114 0 0
உலக செய்திகள்

பிரித்தானியத் துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரிக்கை!

இஸ்ரேலில் தங்கியுள்ள பிரித்தானியாவின் தூதரை “இன்றிரவுக்குள்” வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் “யூத வெறுப்பு” (anti-Semitic)…

118 0 0