உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
137 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியதாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். ஏகாதிபத்திய நடவடிக்கை ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.

அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில், எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும் தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

79 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

64 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

77 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

84 0 0