உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவையொட்டி கலைமாமணி சாரதாவின் கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
88 பார்வைகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா 2026ஐ முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தமது பாரியாருடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைமாமணி சாரதா ராகவ்வின் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், சிறப்பான குரல் வளம், இசை நயம் மற்றும் பக்தி உணர்வுடன் பாடல்கள் வழங்கப்பட்டதுடன், அவருடன் இணைந்து பங்கேற்ற கலைஞர்களின் இசை வழங்குகையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

கலைமாமணி சாரதா ராகவ்வுடன் மிருதங்கக் கலைஞர் ரமேஷ், விசைப்பலகை கலைஞர் ராஜினிகாந்த் உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தி.வேல்நம்பி, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மோகனதாஸ், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0