உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா; சில பாடசாலைகளுக்கு விடுமுறை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு 2026.09.09 அன்று விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியில்.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.!

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி…

72 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கலுகலை பகுதியில் உள்ள வீதித் தடை சோதனை சாவடியில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு கித்துல்கல பகுதியில்…

72 0 0
இலங்கை செய்திகள்

மீளப் பெறப்பட்ட யோஷிதவின் மேன்முறையீட்டு மனு.!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

73 0 0