உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
122 பார்வைகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 37 வயதுடைய, மஹியங்கனை மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் பிரேத அறை ஊழியராவார்.

மருதானைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போதே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பிரேத அறைக்கு அருகாமையில் வைத்து இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை – வானத்தமுல்ல பகுதியிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்களுக்கும் வெளிநபர்களுக்கும் நீண்டகாலமாக விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சட்ட மருத்துவப் பரிசோதனையின் போது இவ்விருவரும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சம்பத் இந்திக குமாரவிடம் வினவியபோது, கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் இருவரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி.!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

87 0 0