உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

ராசி பலன்கள் 8 மணி நேரம் முன்
94 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிகம் பேசாதீர்கள். அளவோடு பேசுங்கள். வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே செய்து முடித்து விடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளிலும் கவனம் தேவை. சின்னச் சின்ன நஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல உறவுகளிடத்தில் பேசும்போதும் கவனம் தேவை. நல்ல நண்பர்கள் உறவுகளை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவைப்படுகிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். முன் கோபம் வேண்டாம். எதிரிகளோடு பேசினாலும் நிதானம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். மனதளவில் வருத்தம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவலையான இந்த நாளில் இறைவழிபாடு செய்ய மறக்காதீர்கள். வேலையில் ஆர்வம் செலுத்துங்கள். நேரத்தை கட்டாயம் வீணடிக்கக் கூடாது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். பல நாள் முடிக்க முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். முன்னேற்றம் நிறைந்த நாளாகவும் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பயம் பதட்டம் இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். உறவுகளோடு மனக்கசப்பு வரலாம். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். புது நண்பர்களின் வருகை மனதிற்கு அமைதியை தரும். மனதில் இருந்த பாரம் குறையும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். சுயநலத்தோடு சிந்திப்பீர்கள். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். மனநிறைவு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பயம் பதட்டம் இருக்கும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பம் குழந்தை போன்ற கவலையால் மனம் சோர்வடையும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. மனதை ஒருநிலைப்படுத்த இறைவனை நினைத்து பத்து நிமிடம் தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கவனத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பெரியவர்களிடத்தில் மரியாதையோடு நடக்க வேண்டும். வார்த்தையில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். புது முயற்சிகள் வெற்றி அடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடையும் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்…

62 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு…

69 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காதுக்கு இனிமை தரும் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெற்றி வாகை சூட கூடிய…

72 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இடையூறாக இருந்து வந்த இன்னல்கள் எல்லாம்…

84 0 0