உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரவுகளில் குப்பை கொட்டுவோர் மீது சட்டநடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் முறையற்ற குப்பை அகற்றும் பழக்கத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தன்மைகள் பாதிக்கப்படுகின்றன. அனுமதியின்றி இரவுகளில் குப்பைக் கொட்டுவோரைக் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.

சுற்றாடல் பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் புதிய திருத்தங்களின்படி, அபராதத் தொகை முன்பு இருந்த 10,000 ரூபாவிலிருந்து 1 இலட்சம் தொடங்கி 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல் பொலித்தீன், பிளாஸ்டிக், மக்கக்கூடிய கழிவுகள் மற்றும் கண்ணாடி எனத் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே பொதுமக்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் வழிகாட்டுதலின்படி 40 சுகாதாரத் தொழிலாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போதிய வாகனங்கள் மற்றும் நிதி இருந்தபோதிலும், பணியாளர்களைப் பெறுவதிலும் அவர்களைத் தக்கவைப்பதிலும் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்தக் குப்பைகளைத் தாங்களே முறையாகச் சேமித்து, பிரதேச சபையின் குப்பை வண்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

நமது மண்ணை அழகுபடுத்தவும் சுத்தமாகப் பேணவும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அரசாங்கம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொ**லை.!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…

78 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மீண்டும் பழைய மாணவர் சங்கம்.!

1869 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அதன் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்…

62 0 0
இலங்கை செய்திகள்

உணவகங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை.!

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர…

74 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இராணுவ வாகனம் விபத்து; ஒருவர் உ**யிரிழப்பு.!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி கிளியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மாலை இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு 11…

83 0 0