உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 24.10.2026

ராசி பலன்கள் 10 மணி நேரம் முன்
82 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பல நாள் செய்ய முடியாத வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு இன்று எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். காதல் கைகூடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். மனக்கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அனாவசியமாக எந்த சண்டைக்கும் போக வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். தேவையான அளவு ஓய்வு எடுப்பது முக்கியம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உற்சாகம் தேவைப்படும். உடல் சோர்வு வேலையில் பின்னடைவை ஏற்படுத்தலாம். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கடமையில் தவறாமல் நடந்து கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்க கூடாது. அனுபவசாலிகளின் பேச்சை தட்டிக் கழிக்கக் கூடாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக வெளிப்படும். திறமையாக செயல்படுவீர்கள். பல பேரால் செய்ய முடியாத வேலையை, நீங்கள் இன்று செய்து விடுவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வருமானம் பெருகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சோம்பேறித்தனம் விடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். பகை விலகும். நீண்ட நாள் மனக்கசப்பு சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். பெருமாள் வழிபாடு செய்வது மேலும் நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை அதிகரிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களே, உங்களுக்கு நல்லது நினைக்க மாட்டார்கள். குடும்ப விஷயங்களை அனாவசியமாக எல்லோரிடமும் பேசாதீர்கள். தேவையில்லாத நண்பர்களிடம் அதிக சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டாம். கவனத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். கடமைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போதும் கவனம் இருக்கட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தெளிவு பிறக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். நேரத்தை வீணடிக்க மாட்டீங்க. கடமையில் கவனத்தோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் அதிகரிக்கும் நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சில குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். அடக்கம் பணிவு வெளிப்படும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.…

90 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான நாளாக இருக்கும். எந்த இடத்தில் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலை நிமிர்ந்து உங்களுடைய திறமையை நிலை நாட்டுவீர்கள். உங்கள்…

103 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சியில் ஒரு கிலோ எடை கூடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.…

94 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். பெயர், புகழ், பாராட்டு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள்…

104 0 0