இன்றைய ராசி பலன்கள் – 23.10.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். அடக்கம் பணிவு வெளிப்படும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கடன் சுமை குறையும். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். இறை வழிபாடு மனதிற்கு நிறைவை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புது முயற்சிகளை நாளை வைத்துக் கொள்ளுங்கள். இன்று குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வேண்டாம். நான் சொல்வது தான் சரி என்று எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிதானதோடு சிந்தித்து செயல்படுவீர்கள். அலைச்சலை இழுத்துப் போட்டுக் கொள்ள மாட்டீர்கள். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து விடுபட நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். சுப காரிய தடை விலகும். வீட்டில் சீக்கிரம் சுப நிகழ்ச்சிகள் தொடங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். சில பேருக்கு நீண்ட தூர பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். இருப்பினும் மனதளவில் சின்ன சஞ்சலம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் பெருசாக பாதிப்புகள் வராது. கமிஷன் தொழில் இலாபத்தை கொடுக்கும். விவசாயிகளுக்கு வருமானம் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு சிந்தித்து செயல்படுவீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். எதிரிகளை கூட மன்னித்து விடுவீர்கள். சொந்தபந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய விஷயங்களை பேசி சாதிக்க போறீங்க. வசீகரத் தோற்றம் வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபரை நம்ப வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். புது வேலைக்காக அப்ளிகேஷன் போட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆனால் முன் கோபத்தை குறைக்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் சுமை குறையும்.

