உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
65 பார்வைகள்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்துள்ளனர்.

எனினும், தீ தொடர்ந்து பரவி வருவதால், தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பனந்தோப்பை அண்மித்த பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகள் காணப்படுவதால், குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

36 0 0
இலங்கை செய்திகள்

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று…

55 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

61 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கைதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைதுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல்…

54 0 0