உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

நாமல் ராஜபக்சவின் கைதுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம்

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
56 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைதுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்த SLPPயின் பிரமாண்டக் கூட்டத்தை முடக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, செப்டம்பர் 4 வெளியிட்டுள்ள அறிக்கையில் UNP தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைப் போலவே, நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு ஜனநாயக உரிமை உண்டு என்றும், அதனைத் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசின் மக்கள் ஆதரவு சரிந்து வருவதையே இந்நடவடிக்கை காட்டுவதாகவும், “கைதுகள் மூலம் அரசியல் தலைவர்களுக்கான மக்கள் ஆதரவை அழித்துவிட முடியாது” என்றும் UNP தெரிவிடைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

39 0 0
இலங்கை செய்திகள்

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று…

57 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத்…

65 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

63 0 0