கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.