உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
114 பார்வைகள்

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று (01) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது உரையாற்றிய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல, தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த விசேட அதிரடிப்படை வீரர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை எனத் தெரிவித்தார்.

அத்துடன், வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறவாது போற்றுவதுடன், அவர்களின் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதும் பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோவில் விசேட…

57 0 0
அம்பாறை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

223 0 0
அம்பாறை செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்; மக்கள் பீதியில்.!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர…

205 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…

192 0 0