உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
39 பார்வைகள்

பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஜா-எல, நிவந்தம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், அவர்களின் அண்டை வீட்டைச் சேர்ந்த (உறவினர்) இரு சிறுவர்களும் இந்த சோக சம்பவத்திற்கு இரையாகியுள்ளனர்.

கடலில் மூழ்கி மாயமானவர்களை மீட்பதற்காக உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இந்நிலையிலேயே, இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாயான மலிஷா பெர்னாண்டோ (35 வயது) என்பவரின் சடலம் துங்கல்பிட்டிய சரக்குக்கந்த கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

அத்துடன், அவரது 4 வயது மகளான வினுதி விதம்சவின் சடலம் பமுனுகம வஹட்டியகொட கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், அவர்களுடன் சென்ற 11 வயதுடைய விஷ்வா பிரசாதி என்ற சிறுமியின் சடலமும் சரக்குக்கந்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களது முகவரி இலக்கம் 170, நிவந்தம, ஜா-எல என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, காணாமல் போன 13 வயதுடைய சதீஷ அனுஹஸ் என்ற மூத்த சிறுவனைத் தேடும் பணிகளில் இலங்கை கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பமுனுகம மற்றும் துங்கல்பிட்டிய பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்டு கரை ஒதுங்கியுள்ள சடலங்கள், நீதவான் பரிசோதனைகளின் பின்னர் மேலதிக பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் ராகம பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடை; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

கடந்த சில நாட்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர். அத்துடன்…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

66 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி.!

இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அன்று எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்தவர்கள் இன்று அவற்றின் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றார்கள்.!

அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் முதன்மை மையங்கள் எனத் தங்கள் வாயாலேயே…

66 0 0