உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

அன்று எமது அபிவிருத்தித் திட்டங்களை விமர்சித்தவர்கள் இன்று அவற்றின் அவசியத்தை ஒப்புக்கொள்கின்றார்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
66 பார்வைகள்

அன்று தமது அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைக் கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் முதன்மை மையங்கள் எனத் தங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளதையிட்டுத் தாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

லுணுகம்வெஹர பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்தங்கிய நிலையிலிருந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு அம்புல் தியல் கொண்டு செல்வதற்காகவே என எதிர்த்தரப்பினரால் ஏளனம் செய்யப்பட்டது. ஆனால், இன்று அதே நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெரிசலாகப் பயணிப்பதைக் காணமுடிகின்றது. மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் உமா ஓயா போன்ற திட்டங்களை அன்று எதிர்த்தவர்களே இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவை அவசியம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள்.

எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் நீர்நிலைகள் வற்றியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எதிர்க்கட்சியையும் ராஜபக்ஷக்களையும் குறை கூறிக்கொண்டிருந்ததே தவிர, நீர்நிலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், அறுவடைக் காலத்தில் அரிசி மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேனைப் பயிர்ச்செய்கைக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

ஆட்சியைப் பிடித்த நாள் முதல் மக்கள் மீது கடுமையான வரிச்சுமையைச் சுமத்தி அரசு துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணங்களைக் கூறும் அரசு, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துறைமுக மற்றும் நிதி அமைச்சுசார் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்துவிட்டு, இன்று வேலை கேட்டுச் செல்லும் இளைஞர்களை அரசு விரட்டியடிக்கின்றது.

பொதுவாகக் காலப்போக்கில்தான் மக்களுக்கு அரசின் மீது வெறுப்பு ஏற்படும். ஆனால் இந்த அரசுக்கோ ஆட்சிக் கட்டிலில் ஏறிய நாளிலிருந்தே மக்களைப் பிடிக்காமல் போய்விட்டது.

இனியாவது பொய் கூறுவதையும் மக்களை ஏமாற்றுவதையும் அரசு நிறுத்திவிட்டு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து முன்நின்று போராடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடை; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

கடந்த சில நாட்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர். அத்துடன்…

21 0 0
இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!

பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில்…

37 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

65 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி.!

இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று…

51 0 0