உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சிலரின் உடலங்கள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளன?

இந்திய செய்திகள் 58 நிமிடங்கள் முன்
47 பார்வைகள்

நேபாளத்தின் தெற்கு சித்வான் பகுதியை ஒட்டியுள்ள இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் ஆறுகளில் உடல்கள் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளத்தின் காரணமாக உடல்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கௌரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு உடல்களும், சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் மூன்று உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உடல்களை அடையாளம் காண அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெள்ளப் பேரழிவில் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஏழு உடல்களும் இன்னும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

78 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

46 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

94 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

68 0 0